லண்டனில் உபேர் டாக்சியில் பயணம் செய்த போது ஓட்டுநரின் முறையற்ற நடவடிக்கையால் மிக மோசமான அனுபவத்தை எதிர்கொண்டதாக நடிகை சோனம் கபூர் தெரிவித்துள்ளார்.
தற்போது லண்டனில் உள்ள அவர், இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் லண்டனில் தான் உபேர் டாக்சியில் பயணம் செய்தபோது ஓட்டுநர் நிதானமிழந்த நிலையிலும் கூச்சலிட்டவாறும் வாகனத்தை இயக்கியதாக தெரிவித்துள்ளார்.
ஓட்டுநரின் முறையற்ற நடவடிக்கைகளால் தான் கலங்கிப்போய்விட்டதாகக் கூறியுள்ள அவர், லண்டனில் பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துமாறு தனது நண்பர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் டிவிட்டரில் மன்னிப்பு கோரியுள்ள உபேர் நிறுவனம் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.