ஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட் கார்டுகள் மற்றும் கிரடிட் கார்டுகளில், அந்த சேவையை ரத்து செய்துவிடுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி குறிப்பாணை அனுப்பியுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 80 கோடி டெபிட் கார்டுகளும், 5 கோடி கிரடிட் கார்டுகளும் புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனைக்கு ஒருமுறை கூட பயன்படுத்தப்படாத கார்டுகளில், அந்த குறிப்பிட்ட சேவையை மட்டும் நீக்கி வைக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு வரும் மார்ச் மாதத்தில் இருந்து அமலுக்கு வருகிறது. ஆன்லைன் பரிவர்த்தனை வசதி டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டில் இருந்து நீக்கப்பட்டுவிட்டால், அதன் பிறகு விண்ணப்பம் அளித்தே அந்த வசதியைப் பெறமுடியும். ஆன்லைன் பரிவர்த்தனைக்கு கார்டுகளை பயன்படுத்தாதவர்கள் பெரும்பாலும் ஊரகப் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இத்தகைய கார்டுகளின் விவரங்களை திருடியே டிஜிட்டல் பரிவர்த்தனை மோசடி நடைபெறுவதால், அதைத் தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p