மும்பையில் இருந்து புவனேசுவரம் சென்று கொண்டிருந்த லோக்மானிய திலக் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே தடம் புரண்டதில் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்று காலை 7 மணி அளவில் கட்டாக் அருகே சாலாகோவன் மற்றும் நேர்கண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்த போது அதன் 8 பெட்டிகள் தடம் புரண்டன.
அடர்ந்த மூடுபனி காரணமாக சிக்னல் மாறி வந்த ரயில், சரக்கு ரயில் ஒன்றின் கார்டு பெட்டியில் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து முழுமையாக விலகி கவிழ்ந்தன.
3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட நிலையில் நின்றன. காயமடைந்த பயணிகள் கட்டாக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p