செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

என்.பி.ஆர் - மத்திய அரசு திட்டவட்டம்..!

Jan 16, 2020 12:49:25 PM

தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்காக பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு ஆவணமோ அல்லது ரேகையைப் பதிவிடும் பயோமெட்ரிக் பதிவுகளோ கேட்கப்பட மாட்டாது என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் அமல்படுத்த உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு மேற்கு வங்கம், கேரளா, பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதையடுத்து குடிமக்கள் பதிவேட்டின் போது எந்த ஆவணமும் கேட்கப்படாது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் மத்திய அரசு மீண்டும் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சக அதிகாரிகள், தேசிய குடிமக்கள் பதிவேட்டின் நோக்கம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் விரிவான அடையாளத்தை தெரிந்து கொள்வது மட்டுமே எனக் கூறியுள்ளனர்.

இதற்காக பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு ஆவணமோ, கைரேகை பதிவிடும் பயோமெட்ரிக் முறைகளோ எடுக்கப்படாது எனவும் அவர்கள் உறுதிபடக் கூறியுள்ளனர்.

வெறும் கேள்வி பதில்களின் அடிப்படையில் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேடு இருக்கும் எனவும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுக்கும் பணி தங்கள் மாநிலத்தில் நடைபெறாது என்று கேரளா மற்றும் மேற்கு வங்கம் அறிவித்துள்ள நிலையில் இந்தத் திட்டத்தின் பயிற்சிக்கு, 3 ஆயிரத்து 941 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
ஜார்கண்ட் மாநில அரசு மாஃபியாக்களின் அடிமையாகிவிட்டது - பிரதமர் மோடி
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்து - 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..
ரயில் தண்டவாளத்தில் மாணவி தவறி விழுந்த பதற வைக்கும் சிசிடிவி காட்சி
காலிஸ்தான் விவகாரத்தில் மோதல் வெடித்துள்ள நிலையில், இந்தியா - கனடா இடையே வார்த்தை மோதல் அதிகரிப்பு
தீபாவளி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முவுர் கொலை..
காரைக்கால் அரசு அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த திருநங்கை .!
புதுச்சேரி விடுதலைதினத்தையொடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் முதலமைச்சர் ரங்கசாமி
நாடு முழுவதும் ஒளிவீசும் மின்விளக்குகளால் சிறப்படைந்த தீபாவளி பண்டிகை
வெடித்துச் சிதறிய வெங்காய வெடிகள் துண்டு துண்டான இளைஞரின் உடல்
அயோத்தியில் 25 லட்சம் அகல்விளக்குகளை ஏற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்த தீப உற்சவ விழா

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?


Advertisement