ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி தேவேந்திரசிங்கை பணிநீக்கம் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி தில்பக்சிங் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயங்கரவாதிகளுடன் தேவந்திரசிங்கிற்கு உள்ள தொடர்பு குறித்து என்ஐஏ விசாரிக்க பரிந்துரைத்து இருப்பதாக தெரிவித்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள டிஎஸ்பி தேவேந்திரசிங் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 3 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 5 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ஹாரூன் வானி சுட்டுக் கொல்லப்பட்டான் என்றும் டிஜிபி தில்பக்சிங் தெரிவித்தார்.