தனக்கு வேண்டப்பட்ட எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு முதலமைச்சர் எடியூரப்பாவிடம் மிரட்டல் தொனியில் பேசிய சாமியாரால் கர்நாடகத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் தாவண்கரேவில், லிங்காயத் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் பேசிய பஞ்சமாசாலி மடாதிபதியான வச்சானந்தா சுவாமி, லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏ முருகேஷ் நிரானிக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை என்றால், ஒட்டுமொத்த லிங்காயத் சமூகத்தின் ஆதரவையும் எடியூரப்பா இழக்க நேரிடும் என்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த எடியூரப்பா, இந்த மிரட்டலுக்கு பணிந்து தாம் பணியாற்ற முடியாது என்று கூறி மடாதிபதி வச்சானந்தா சுவாமியின் கால்களை தொட்டு வணங்கிவிட்டு எடியூரப்பா அங்கிருந்து புறப்பட முயன்றபோது, அவரை மடாதிபதி சமாதானப்படுத்தி அமரவைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடியூரப்பா, தாம் முதலமைச்சர் ஆவதற்கு காரணமான 17 எம்எல்ஏக்களுக்காக பார்ப்பதாகவும், இல்லை எனில் ராஜினாமா கூட செய்யத் தயார் என்றும் குறிப்பிட்டார்.