அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று பேசிய மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கர், மகாபாரத காலத்தில் அர்ஜுனனின் அம்புக்கு அணுஆயுத சக்தி இருந்ததாக தெரிவித்தார்.
கொல்கத்தாவில் அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியை மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் தொடங்கிவைத்து உரையாற்றினார்.
20ஆம் நூற்றாண்டில்தான் மனிதர்களால் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் ராமாயண காலத்திலேயே பறக்கும் தேர்கள் இருந்தன என்று அவர் கூறினார்.
மகாபாரத காலத்தில் அர்ஜுனனின் அம்புக்கு அணுஆயுத ஆற்றல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், அறிவியல் கண்காட்சியில், இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதை ஆளுநர் தவிர்க்க வேண்டும் என அறிவியல் அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.