நிர்பயா வழக்கில் திஹார் சிறையில் தூக்குக் கயிறை எதிர்நோக்கி இருக்கும் 4 குற்றவாளிகளும் 23 முறை சிறை விதிகளை மீறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி, டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மருத்துவ துணைப் படிப்பு மாணவி நிர்பயா சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளின் அனைத்து சட்டரீதியான மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு வரும் 22 ஆம் தேதி அவர்கள் தூக்கில் ஏற்றப்பட உள்ளனர்.
இந்த 4 பேரில் சிறை விதிகளை மீறியதாக, வினய் 11 முறையும், முகேஷ் 3 முறையும், பவன் 8 முறையும், அக்ஷய் ஒரு தடவையும் தண்டிக்கப்பட்டதாக திஹார் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குற்றவாளிகளில் 3 பேர் சேர்ந்து சிறையில் வேலை பார்த்ததில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.