டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 70 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு பிப்ரவரி 8-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது எம்எல்ஏக்களாக இருக்கும் 46 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி அரவிந்த் கெஜ்ரிவால் நியூ டெல்லி தொகுதியிலும், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பட்பர்கஞ்சில் இருந்தும் போட்டியிடுகின்றனர்.