ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக மைக்கேல் தேபபிரத பத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சாரியா தனது பதவிக்காலம் முடிவதற்கு 6 மாதங்கள் முன்னதாகவே கடந்த ஜுலை மாதம் பதவி விலகினார். அந்த இடத்தில் தற்போது பத்ராவை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மும்பை ஐஐடியில் பொருளாதாரத்தில் பிஎச்டி முடித்துள்ள பத்ரா, ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்தார்.
1985 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியில் சேர்ந்தது முதல் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார்.
3 ஆண்டுகள் துணை ஆளுநர் பதவியில் பத்ரா இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் செயல்பட்டு வரும் நிலையில், 4வது துணை ஆளுநராக மைக்கேல்பத்ரா பணியாற்ற இருக்கிறார்.