பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்தது கவலை அளிப்பதாக இருந்தாலும், இந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிரான பேச்சுக்களை நிறுத்தப் போவதில்லை என மலேசிய பிரதமர் மகாதிர் முகம்மது கூறி இருக்கிறார்.
குடியுரிமை திருத்தச்சட்டம் மத அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளது என கூறியதுடன், இந்தியா காஷ்மீரை ஆக்கிரமித்து வைத்துள்ளது என்றும் அபாண்டமாக கூறியிருந்தார் மகாதிர் முகம்மது.
இதன் எதிரொலியாக மலேசியாவில் இருந்து கச்சா பாமாயில் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டாம் என மத்திய அரசு வர்த்தகர்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தியது.
இந்த நிலையில் தங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் இந்தியாவின் தவறை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது என்று மலேசியா பிரதமர் மகாதிர் முகம்மது தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் மிகப்பெரிய பாமாயில் இறக்குமதியாளராகிய இந்தியா, கடந்த ஆண்டு 44 லட்சம் டன்களை இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.