பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
அம்மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய அவர், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பிரதமர் மோடி தெளிவுபடுத்தி இருப்பதாகவும் கூறினார். தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் அமல்படுத்துவது சாத்தியமற்றது என்று அவர் குறிப்பிட்டார்.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும் சட்டப்பேரவையில் விவாதிக்க தயார் என்றும் நிதிஷ்குமார் தெரிவித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இடம்பெற்றுள்ள நிலையில் என்ஆர்சிக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.