13 நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் வருடாந்திர புவி பொருளாதார உச்சி மாநாடு டெல்லியில் நாளை நடக்கிறது. இந்த மூன்று நாள் நிகழ்வில் 105 நாடுகளைச் சேர்ந்த 180 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
ரெய்ஸினா டயலாக் 2020 என்ற பெயரில் நடக்க உள்ள இந்த மாநாட்டில் ரஷ்யா, ஈரான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் துணை வெளியுறவு அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், ராணுவத் தலைவர்கள் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பார்கள் என வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கும் இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோகலே, முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், கப்பற்படை தலைமைத் தளபதி கரன்பீர் சிங் மற்றும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளின் படைத் தளபதிகளும் பங்கேற்க உள்ளனர்.