இந்திய விமானப்படைக்கு, 200 போர் விமானங்களை வாங்க இருப்பதாக, பாதுகாப்புத்துறைச் செயலாளர் அஜய் குமார் தெரிவித்திருக்கிறார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விமானப்படை திறனை அதிகரிப்பதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு உறுதியாக உள்ளது என்றார்.
அந்த வகையில், 200 போர் விமானங்களை கொள்முதல் செய்ய உள்ளதாகத் தெரிவித்த அஜய் குமார், இதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் கூறினார்.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து, தேஜாஸ் மார்க்-1 என்ற 83 இலகுரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எஞ்சிய 110 விமானங்களை, அவுட்சோர்சிங் மூலம் வாங்கவும் திட்டமிட்டிருப்பதாக, பாதுகாப்புத்துறைச் செயலாளர் அஜய்குமார் கூறியிருக்கிறார். விமானப்படையில் தற்போது சுகோய் 30, மிராஜ் 2000 , மிக் 29 மற்றும் ஜாகுவார்ஸ், மிக் 21 பைசன்ஸ் உள்ளிட்ட போர் விமானங்கள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.