ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் போலி நிறுவனங்கள் மூலம் 86 கோடி ரூபாய்க்கு ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த 16 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
அப்பாவி நபர்களின் ஆதார் மற்றும் பான் அட்டைகளை மோசடியாக பெற்றுள்ள இந்த கும்பல், அதனைக் கொண்டு 278 போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளது.
ஒரு நிறுவனத்தின் விலை 35 ஆயிரம் ரூபாய் என்ற ரீதியில் 19 வெவ்வேறு குழுவினருக்கு அதனை விற்பனை செய்துள்ளனர். கடந்த இரண்டரை ஆண்டுகளாக 900 கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்களை கொண்டு சென்றதற்காக போலியான மின்னணு ரசீதுகளை உருவாக்கி, ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.
ஜிஎஸ்டி அதிகாரிகள் அனுப்பிய நோட்டீஸ் திரும்பி வந்ததை அடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இந்த முறைகேட்டில் மேலும் 103 பேருக்கு தொடர்பிருப்பதால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.