தமிழகத்தில் சாலை விபத்துக்களும், அதில் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களும் குறைந்துள்ளதாக சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சாலைப் பாதுகாப்பு வாரத்தையொட்டி நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் விபத்துகள் நடைபெறுவதாகவும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 62 சதவீதம் பேர் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என கட்கரி வேதனை தெரிவித்தார். நாட்டிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துக்களும், அதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைவு எனக் குறிப்பிட்ட அவர், விபத்துக்களின் விழுக்காடு 29 ஆகவும், உயிரிழப்புகளின் விகிதம் 30 ஆக இருப்பதாகவும் தெரிவித்தார்.