சைபர் குற்றங்கள் பிரிவுக்கான புதிய கட்டடத்தை டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
சைபர் குற்றங்களுக்கான புகார்களைப் பெறுதல், மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் மீது ஆய்வு நடத்துதல், நடவடிக்கை எடுத்தல், மற்ற புலனாய்வு நிறுவனங்கள் காவல் நிறுவனங்களுடன் ஒத்துழைப்புக்கான பரஸ்பர தகவல் பரிமாற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகள் இந்த அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும். சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான பொதுத் தளமாக செயல்பட உள்ள இந்த அலுவலகம் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.