பாகிஸ்தானில் மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி காவல் துறை உயரதிகாரி உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லைப் பகுதியில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவட்டா நகரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த குண்டு வெடிப்பில் நகர காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 14 பேர் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாரம் குவெட்டாவில் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பு இது என்றும், துணை ராணுவப் படையினர் அந்த இடத்தைச் சுற்றி தேடுதல் பணியை மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.