கேரள மாநிலம் கொச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட மாராடு அடுக்குமாடிக் குடியிருப்பை இடிக்கும் பணி இன்று தொடங்குவதால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்பு இடிக்கப்படும் நேரத்தில் ட்ரோன் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறி பறக்க விட்டால் அவற்றை சுட்டு வீழ்த்த உத்தரவிடப்பட்டிருப்பதாக கொச்சி சரக டிஐஜி தெரிவித்தார். மாராடு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த 343 வீடுகள் அடங்கிய ஜெய்ன்ஸ் கோரல் கோவ், அல்ஃபா ஷெரீன், ஹெச்20 ஹோலி ஃபெயித் மற்றும் கோல்டன் கயலோரம் ஆகிய அடுக்கு மாடிக் குடியிருப்புகளை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.