காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது.
இக்குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில், தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய செயலர் நீரஜ்குமார், புதுச்சேரி மாநில வளர்ச்சி ஆணையர் அன்பரசு, கர்நாடக மாநில கூடுதல் தலைமை செயலர் மற்றும் கர்நாடக, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்கள் என 16 பேர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான காவிரி நீர் பங்கீடு, பருவமழைப் பொழிவு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டன.