ஜம்மு காஷ்மீரை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கக் கூடிய இந்தியாவின் மிகப்பெரிய ரயில் பாலம் செனாப் நதியின் மீது 359 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது.
பாரீசின் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் உயரத்தை விட இது 35 அடி கூடுதலாகும். அம்பு போன்ற வளைவு கொண்ட இந்த மிகப்பெரிய பாலத்தை ரயில்வே நிர்வாகம் அமைத்து வருகிறது. ரயில்வேயின் 150 ஆண்டு வரலாற்றில் மிகவும் சவாலான பணி இது என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
5462 டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்ட இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் தாமதமாகி உள்ளன. இந்த ஆண்டே அவை முடிவடையும் என்று எதிபார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் இந்த பாலம் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 260 கிமீ வேகத்தில் வீசும் காற்றை தாங்கும் வகையில் இந்த வடிவமைக்கப்படும் இந்த பாலம், பொறியியல் அற்புதமாக திகழும் என ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தடையற்ற இணைப்பை வழங்கும் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, செனாப் ரயில்வே பாலம் திட்டம் 2002 ஆம் ஆண்டில் ஒரு தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.