ஆந்திரப்பிரதேசத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழை தாய்மார்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சித்தூரில் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டுள்ள இந்த அம்ம வடி திட்டத்திற்கு 6 ஆயிரத்து 456 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார். அரசு பள்ளிகளில் 6 நாட்களுக்கும் வெவ்வேறு வகையான மதிய உணவு தர திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரும் கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயமாக்கப்பட்டு ஆங்கில வழி கல்வி திட்டம் கொண்டுவரப்படவுள்ளது என்றும் இந்த திட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்பாக உயர்த்தப்படும் என்றும் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.