சியாச்சின் பனிமலை பகுதிக்கு சென்ற ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, அங்குள்ள போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.
ராணுவத் தளபதியாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக அங்கு சென்ற அவர், அங்கு பணியிலுள்ள வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார். மேலும் வீரர்களுடன் சேர்ந்து உணவருந்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராணுவத் தளபதியாக சியாச்சின் வந்திருப்பது மகிழ்ச்சி என்றும், ராணுவ வீரர்களுக்கு தேவையான உடை உள்ளிட்ட வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.