நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 31ம் தேதி தொடங்கவுள்ளது.
31ம் தேதி தொடங்கி, பிப்ரவரி மாதம் 11ம் தேதி முதல் கட்டமாகவும், மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், முதல் நாளில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தவுள்ளார்.
பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இது அவர் தாக்கல் செய்யும் 2ஆவது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p