குஜராத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சென்ற விலையுயர்ந்த சொகுசுக் காருக்கு நாட்டிலேயே அதிகபட்ச அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்திய போது, விலை உயர்ந்த போஷே ரக கார் வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனையிட்ட போது கடந்த 2 வருடங்களாக சாலை வரி கட்டாமல் ஓடிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அந்தக் காருக்கு 27 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள அகமதாபாத் காவல்துறையினர் முறையான ஆவணங்கள் இன்றி இயங்கிய போஷே காருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் தற்போது நாட்டிலேயே அதிகபட்சத் தொகை என்று குறிப்பிட்டுள்ளனர்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p