புதுச்சேரியில் அரசு கிளை நூலகத் திறப்பு விழா ஒன்றில் பேசிய முதலமைச்சர், அமைச்சர், அரசு கொறடா உள்ளிட்டோர் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சரமாரியாக குற்றம்சாட்டினர்.
பூரணாங்குப்பத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேசிய அரசு கொறடா அனந்தராமன், கிரண்பேடி டெல்லியில் 2 முறை தேர்தலில் தோல்வியுற்று கொல்லைப்புறமாக பதவிக்கு வந்து தொல்லை கொடுத்து வருகிறார் என்றார்.
அனந்தராமனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம், மக்களின் தேவைகளை, உணர்வுகளை அறியாதவர் கிரண்பேடி என சாடினார். இறுதியாகப் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, வரும் பிப்ரவரி மாதத்தோடு புதுச்சேரியைப் பிடித்த சனி விலகப் போவதாகக் கூறினார்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p