மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களை தூக்கிலிடும் பணிக்காக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இருவருக்கு திகார் சிறை நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக திகார் சிறை நிர்வாகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இரண்டு தூக்கிலிடுபவர்கள் வேண்டுமென உத்தரப் பிரதேச மாநில சிறைத் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
முன்னதாக, கடந்த மாதம் உத்தரப்பிரதேச சிறை துறைக்கு அனுப்பிய கடிதத்தில், மீரட் சிறையில் உள்ள தூக்கிலிடுபவரை அனுப்ப கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிர்பயா கொலை வழக்கில் முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக் ஷய் குமார் சிங் ஆகியோரது மரண தண்டனை 22ம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.