ஜம்மு காஷ்மீரின் உண்மை நிலையை அறிய 15 நாடுகளின் தூதர்கள் இன்று ஸ்ரீநகர் வருகின்றனர்.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்த நிலையில் இந்த குழுவில் இருந்து ஐரோப்பிய யூனியன் வெளியேறியது.
வீட்டுச்சிறையில் அடைபட்டிருக்கும் காஷ்மீர் தலைவர்களை சந்திக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஐரோப்பிய யூனியன் விதித்ததற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது. ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் வேறொரு தேதியில் தனியாக காஷ்மீர் சென்று ஆய்வு நடத்தலாம் என்றும் மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.