நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்களுடன் கலந்துரையாடுகிறார்.
நிதி ஆயோக் கின் தலைவர் ராஜீவ் குமார், தலைமைச் செயலர் அதிகாரி அமிதாப் கன்ட், உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொருளாதார ரீதியான வளர்ச்சியை முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
இக்கூட்டம் பட்ஜெட்டுக்கான பரிந்துரைகளை வழங்கும். கடந்த திங்கட்கிழமை நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். பொருளாதார நிலையை மேம்படுத்தவும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.