பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் நாள் ஒன்றுக்கு 26 கோடி ரூபாய் அளவிலான நட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2018-19ம் நிதியாண்டில் 7ஆயிரத்து 600 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து உள்ளதால் அதன் 95 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக முடிவெடுக்க மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தின் தற்போதைய 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனை சிறப்புத் தேவைக்கான வாகனம் கணக்கில் சேர்க்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.