முதன் முறையாக ஜம்மு காஷ்மீரை சுற்றிப்பார்க்க வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதனை ஆசியான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் 20 பேர், அடுத்த சில நாட்களில் காஷ்மீருக்கு வர உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதையடுத்து காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இது குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனம், பாகிஸ்தானின் தலையீடு போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்ட மத்திய அரசு, தற்போது வெளிநாட்டவர்கள் காஷ்மீரில் நேரில் ஆய்வு நடத்த அழைப்பு விடுத்துள்ளது. பன்னாட்டு உயர் அதிகாரிகள் குழுவை காஷ்மீர் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு தூதர்கள் 20 பேர் மற்றும் மூத்த அதிகாரிகள் குழுவினர் காஷ்மீரை நேரில் பார்த்து அங்குள்ள வியாபாரிகள், ராணுவத்தினர், மற்றும் உள்ளூர் தலைவர்களுடன் பேச்சு நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தால் அமைதிக்கு பாதகம் ஏற்படுவதையும் இக்குழுவினர் நேரில் கண்டறிய உள்ளனர்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p