விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் தேனீர், காபி போன்ற பானங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேன் வழங்க விமான நிறுவனங்களிடம் வலியுறுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்து உள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்து உள்ள மத்திய தேனீ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தற்போது விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் பானங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையே பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
இதற்கு பதிலாக தேன் பாக்கெட்டுகள் அல்லது தேன் கட்டிகளை விமானங்கள் மற்றும் ஓட்டல்களில் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் நிதின்கட்கரி கூறினார்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p