திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அளவு குறைவாக உள்ள தேங்காயை விற்பனை செய்வதாக ஆந்திர மாநில பா.ஜ.க.செயலாளர் பானு பிரகாஷ் ரெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தேவஸ்தானம் சார்பில் ஒரு தேங்காய் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய நிலையில் ஒவ்வொரு தேங்காயின் அளவும் நிபந்தனைகளின் படி இல்லாமல் மிகச் சிறிய அளவிலான தேங்காயை தேவஸ்தானம் விற்பனை செய்து பக்தர்களை மோசடியில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
வைகுண்ட ஏகாதசியின்போது பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்த நிலையில், அமைச்சர் கே டி ராமாராவை, கோயில் பணியாளர்கள் செல்லக்கூடிய பயோ மெட்ரிக் வழியாக தேவஸ்தான அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p