குஜராத் மாநிலம் அகமதாபாதில் வருடாந்திர சர்வதேச காற்றாடித் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.
முதலமைச்சர் விஜய் ரூபானி காற்றாடியை பறக்க விட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். இதில் உள்ளூர் மக்களுடன் 40 நாடுகளில் இருந்து திரண்டுள்ள ஏராளமான வெளிநாட்டவர்களும் உற்சாகத்துடன் காற்றாடிகளை பறக்க விட்டனர். பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்பட்ட காற்றாடிகள் வானில் வட்டமிட்டன.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p