கொச்சியில் நடைபெற இருந்த வெளிநாட்டு பெண்ணின் திருமணத்துக்கு உருவான சிக்கல், குடியரசுத்தலைவர் மாளிகையின் தலையீட்டால் விலகியது.
அமெரிக்காவை சேர்ந்த ஆஷ்லே ஹால் என்ற பெண், தனது திருமணத்துக்காக கேரள மாநிலம் கொச்சியிலுள்ள தாஜ் விவாந்தா நட்சத்திர விடுதி அரங்கை 7ம் தேதிக்கு பதிவு செய்திருந்தார்.
அதே நாளில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கு தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், திருமணத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு 48 மணி நேரத்துக்கு முன்னதாக அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகையை டேக் செய்து ட்விட்டரில் மணப்பெண் உதவி கோரினார். இந்த நிலையில், 7ந் காலையிலேயே குடியரசுத் தலைவர் புறப்பட்டுவிடுவார் என தெரிவிக்கப்பட்டதால் திருமணம் திட்டமிட்டபடி நடைபெற்றது.
அத்துடன் புதுமண தம்பதியருக்கு ராம்நாத், திருமண வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p