ககன்யான் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கான பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை மைசூரில் உள்ள பாதுகாப்புத்துறை உணவு ஆய்வகம் தயாரித்து வருகிறது.
2021-ஆம் ஆண்டில் ககன்யான் விண்கலம் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ககன்யான் மூலம் விண்வெளிக்கு செல்பவர்கள் பயன்படுத்தும் வகையில் பதப்படுத்தப்பட்ட எக் ரோல், வெஜ்ரோல், இட்லி, பாசிப்பருப்பு அல்வா, உள்ளிட்ட உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
உணவை சூடுபடுத்தும் சாதனங்களும் விண்கலத்தில் அனுப்பப்படவுள்ளன. மேலும் புவியீர்ப்பு விசையற்ற விண்வெளியில், தண்ணீர், பழச்சாறு உள்ளிட்டவற்றை அருந்த சிறப்பு கலன்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Watch Video: https://youtu.be/FqyayYP36mk