பனிமழையால் சாலைகளில் பனிக் கட்டிகள் குவிந்ததை அடுத்து இமாச்சலில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
சாலைகள் முழுதும் பனிக்குன்றுகளால் மூடப்பட்டதால் மணாலிக்கும் சோலாங்கிற்குப் இடையே 300க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் போக முடியாமல் சிக்கி உள்ளன. இவற்றை மீட்கும் பணிகள் துவங்கி உள்ளன.
இமாச்சலின் மணாலி, லாகுல் பிட்டி(Lahaul-Spiti), கின்னார், சிம்லா, குஃப்ரி, பார்மர் உள்ளிட்ட இடங்களில் குறிப்பிடத்தக்க அளவிற்கு பனிமழை பெய்துள்ளதை தொடர்ந்து இமாச்சலப் பிரதேசம் முழுதும் பனிப்போர்வை போர்த்தி காட்சி அளிக்கிறது. முக்கிய சுற்றுலா தலங்களான மணாலி,டல்ஹவுசி, குஃப்ரி, கேலாங்க் மற்றும் கல்பாவில் வெப்ப நிலை பூஜ்யம் டிகிரிக்கும் கீழே சென்றுவிட்டது.