பெங்களூருவில் இருந்து மும்பைக்குச் சென்ற இண்டிகோ விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
பெங்களூருவில் இருந்து நேற்று மாலை 6.15 மணிக்கு இண்டிகோ நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320 நியோ வகை விமானம் புறப்பட்டது. இந்த விமானம் மும்பையில் இரவு 8.20க்கு தரையிறங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விமானம் பறந்து கொண்டிருந்த போது அதிக அழுத்தம் காரணமாக நிலைதடுமாறியது. இதையடுத்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக இண்டிகோ விமானம் தரையிறக்க அனுமதிக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் மிகப் பெரிய விபத்து நடந்திருக்கும் என விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p