வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு, ஆளுநர் அனில் பைஜாலை உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கையில் ஆயுதங்களுடன் நேற்றிரவு பல்கலைக்கழக விடுதிகளில் நுழைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தாக்கினர். அங்கிருந்த பொருள்களையும் அவர்கள் சூறையாடினர்.
சுமார் 2 மணி நேரம் நீண்ட இந்த வன்முறையில் பல்கலைக்கழக மாணவர் தலைவர் அயிஷே கோஷ் உள்பட 28 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல்துறை தலைவர் அமுல்யா பட்நாயக்குடன் நேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.