டெல்லியில், JNU என சுருங்க அழைக்கப்படும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே, பெரும் மோதல் மூண்டது.
அப்போது, அங்கு வந்த, ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவரின் மண்டை உடைந்தது. மாலை 6 மணியளவில், முகமூடி அணிந்துவந்த, மாணவர்களின் ஒருதரப்பினர், மற்றொரு தரப்பு மாணவர்கள் மீது, கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
மோதல் சப்தம் கேட்டு வந்த தன்னை, முகமூடி அணிந்தவர்கள் தாக்கியதில், தமக்கு மண்டை உடைந்ததாக, ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்கள் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறியிருக்கிறார். ஆனால், இந்த புகாரை, முகமூடி அணிந்து வந்ததாக கூறப்படும் மாணவர்களின் மற்றொரு தரப்பு மறுத்துள்ளது. அவர்கள் தாக்கியதாலேயே, தற்காப்பிற்காக தாக்கியதாக விளக்கம் அளித்திருக்கிறது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p