உத்தரப்பிரதேசத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதைத் தொடர்ந்து, இந்தியா-நேபாள எல்லையில், கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில், அப்துல் சமது, இலியாஸ் என்ற இரண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாகவும், அவர்கள் பெரும் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் வந்திருப்பதாகவும், மத்திய, மாநில உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. அவர்கள் நேபாளத்திற்கு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வகையில், மகாராஜ்கஞ்ச், குஷிநகர், சித்தார்த் நகர் மாவட்டங்களில் ஒட்டி அமைந்துள்ள இந்திய-நேபாள எல்லையில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உத்திரப்பிரதேச காவல்துறை கூறியிருக்கிறது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p