மியான்மரில் இருந்து இந்தியாவில் குடியேறிய ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று பிரதமர் அலுவலக விவகாரத்துறை அமைச்சர் ஜிந்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட மறுநாளே காஷ்மீரில் அமலுக்கு வந்து விட்டது என்றார். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை, சட்டவிரோதமாக காஷ்மீரில் குடியேறி உள்ள ரோஹிங்கியர்களை வெளியேற்றுவது தான் என்று அவர் கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில், ரோஹிங்கியர்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை என்றும், அவர்கள் மியான்மரில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர்கள் அங்கு தான் செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.