மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொல்கத்தா துறைமுகத்தின் 150வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும் 10ம் தேதி கொல்கத்தா செல்கிறார். அந்த சமயத்தில் மூன்று பல்வேறு நிகழ்ச்சிகளிலும் மோடி பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.
அப்போது அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசுவார்கள் எனவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடர்ந்து இரு தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்த நிலையில், அவர்கள் சந்திக்க இருப்பதாக வெளியான தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
2019 மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் மோடி, கொல்கத்தா செல்வது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.