பாரத ஸ்டேட் வங்கியை தொடர்ந்து, ஹெச்.டி.எப்.சி. வங்கியும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
குறுகிய கால அடிப்படையில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து குறைத்த ரிசர்வ் வங்கி, அதன் பலனை வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டுமென வங்கிகளுக்கு உத்தரவிட்டது.
இதையேற்று பாரத ஸ்டேட் வங்கி வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை அண்மையில் 8 புள்ளி 5 சதவீதத்தில் இருந்து 7 புள்ளி 80 சதவீதமாக குறைத்தது. இதைதொடர்ந்து, ஹெச்.டி.எப்.சி.யும் வரும் 6ம் தேதி முதல் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் புள்ளி பூஜ்யம் 5 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த வட்டி குறைப்பு ஏற்கெனவே வீட்டுக்கடன் வாங்கிய அனைவருக்கும் பொருந்தும் என்று ஹெச்.டி.எப்.சி. வங்கி குறிப்பிட்டுள்ளது.