ஆந்திர மாநிலம் அமராவதியில் காவல்துறை அதிகாரியும் போராட்டக்காரர்களும் பரஸ்பரம் ஒருவர் காலில் ஒருவர் விழுந்தனர்.
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் 3 தலைநகர் திட்டத்தால் அமராவதியின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று கூறி கடந்த 3 வாரங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அமராவதியை அடுத்த மண்டடம் (Mandadam) என்ற இடத்தில் போராட்டத்தைத் தடுக்க வந்த காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வீராரெட்டி காலில் விழுந்த விவசாயிகள் தங்களை போராட அனுமதிக்குமாறு கோரினர். முதலில் அவர்களைத் தடுக்க முயன்ற காவல் அதிகாரி அது பலனளிக்காத நிலையில் தானே அவர்கள் கால்களில் விழுந்து அவர்களை வழிக்கு கொண்டுவந்தார்.