காஷ்மீரில் 5 முக்கியத் தலைவர்களைத் தவிர இதர அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் இருந்து இந்த மாதம் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என யூனியன் பிரதேச நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அது 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
அவர்களில் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, பரூக் அப்துல்லா மற்றும் நயீம் அக்தர், அலி முகம்மது சாகர் ஆகிய 5 பேர் தவிர மற்றவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
அதன்படி பி.டி.எஃப். தலைவர் ஹக்கிம் முகம்மது யாசின், பி.டி.பி. தலைவர்களான ரபி மிர், மஜித் பத்ரு ஆகியோர் ஸ்ரீநகர் எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து இன்று விடுவிக்கப்படுகின்றனர்.