தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக டெல்லி மெட்ரோ ரெயிலில் இலவச அதிவேக வைபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைன் வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயிலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் செல்லும் இந்த மெட்ரோ ரெயில் வழித்தடத்தில், இலவச அதிவேக ‘வைபை‘ வசதியை டெல்லி மெட்ரோ ரெயில் தலைவர் மங்கு சிங், தொடங்கி வைத்தார்.
ரஷியா, தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் மெட்ரோ ரெயிலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ஆசிய நாடுகளில், இதுவே முதல்முறை ஆகும். படிப்படியாக, மற்ற வழித்தடங்களிலும் இலவச ‘வைபை‘ கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.