காஷ்மீரில் 5 மாதங்களுக்கு பிறகு செல்போன் குறுந்தகவல் சேவையும், அரசு மருத்துவமனைகளில் பிராட்பேண்ட் இணையதள சேவையும் இன்று முதல் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் இணையதள சேவை, செல்போன் சேவை முடக்கப்பட்டன.
பின்னர் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி குறிப்பிட்ட சில எண்களுக்கு மட்டும் குறுந்தகவல் சேவைக்கு அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது அனைத்து தரப்பினரின் செல்போன்களிலும் குறுந்தகவல் சேவைக்கும், அரசு மருத்துவமனைகளில் இணையதள சேவைக்கும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.