திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலை பாதையில் ஹரிணி நிழற்பந்தல் அருகே தொடர் மழையால் பாறை சரிந்து சாலையில் விழுந்தது.
தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.