கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக்கோளாறால் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுவதை இஸ்ரோ நாளைக்கு ஒத்திவைத்தது.
சூரியன் பற்றி ஆய்வு மேற்கொள்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் புரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட இருந்தது.
மாலை 4.08 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில், இறுதிக்கட்ட சோதனையின்போது தொழில்நுட்பக்கோளாறு கண்டறியப்பட்டதால் ஏவுதலை வியாழன் மாலை 4.12 மணிக்கு தள்ளிவைப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.